கீழக்கரை சீதக்காதி சாலை நடுத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல் காம்ப்ளக்ஸில் புதிய வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு விழா இன்று மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் தலைமையில் தி.மு.க, அயலக அணி மாவட்ட தலைவர் முகம்மது ஹனிபா, வழக்கறிஞர் நாதியா ஹனிபா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் ஹுசைன் சித்தீகி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் அலுவலகத்தை திறந்து வைத்தார்.அப்போது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் நீதிமன்ற வழக்கறிஞர்கள்,தெற்கு தெரு ஜமாஅத் செயலாளர் சயீது இபுராஹிம், கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இலியாஸ், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இப்திஹார் ஹசன்,கவுன்சிலர் பயாஸ்தீன்,மீரான் அலி,சப்ராஸ் நவாஸ், தி.மு.க,நகர் துணை செயலாளர் ஜெய்னுதீன் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நயீம்,எபன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
