ராமநாதபுரம்,நவ.24:-

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் உள்ளே மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் திமுக அரசுக்கு அமமுக கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ஐ.ஓ.பி.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையின் உள்ளே மழைநீர் தேங்கியிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கபட்டவர்களும், நோயாளிகளை பார்ப்பதற்கு வரும் பார்வையாளர்களும் பாதிக்கப்படுவதாக ராமநாதபுரம் அமமுக கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ஐ.ஓ.பி பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐ.ஓ.பி.பன்னீர் செல்வம் தெரிவித்ததாவது:-

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக மழைநீர் மருத்துவமனையின் உள்ளே தேங்கியிருக்கும் அவலநிலையை நேரில் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
இதனை உடனடியாக மருத்துவ நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக சரிசெய்ய வேண்டும். புதிய மருத்துவமனை கட்டிடத்திலயே இவ்வாறு மழைநீர் உள்ளே வரும் அவலநிலை இருக்கிறது என்றால் பழைய கட்டத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் நிலையென்ன..? என்று சிந்திக்க தோன்றுகிறது. ஏற்கெனவை மழைநீர் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில் மருத்துவமனைக்குள்ளயே மழைநீர் தேங்கி இருப்பதே பார்க்கும் போது நோய் உருவாகும் இடமே இந்த ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையாக தான் இருக்கும் என சிந்திக்க தோன்றுகிறது. இந்த நிலையை உடனடியாக மருத்துவ நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் சரி செய்யவேண்டும். மேலும் நோயாளிகளை பாதுகாக்க தவறிய
திமுக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அமமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த நிலை மேலும் தொடர்ந்தால் அமமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜி.முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *