எம்மை பற்றி

இராமநாதபுரம் மாவட்டம், வானம் பார்த்த பூமி! அரசு அலுவலர்களின் பனிஷ்மென்ட் ஏரியா! கருவேலங் காடுகள்! கடலை நம்பி உள்ள மீனவர்கள்! இல்லையெனில் வெளிநாடுகளில் கொத்தடிமையாக வேலை செய்யும் அவலம்!!! இதற்கிடையில் இந்தியா வரைபடத்தில் புண்ணிய பூமி என்று இந்த மாவட்டத்திற்கு தான் தனி சிறப்பு உண்டு!!!

இந்த இராமநாதபுரம் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு புலனாய்வு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பத்திரிகை நடத்த திட்டமிட்டு இருந்தேன். இந்த பத்திரிகையின் வாயிலாக மறுக்கப்பட்ட செய்தி! மறுக்கப்படும் நியாயங்கள்!! வெளிவட்டாரத்தில் கொண்டு வர முயற்சித்தேன். அதன் காரணமாக 2015 ஆம் ஆண்டு புலனாய்வு எக்ஸ்பிரஸ்க்கு அரசு அங்கிகாரம் பெற்று சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

நமது பிறப்பு சாதாரணமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக அமையட்டும் !ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட இன மக்களுடன் சமத்துவம் சகோதரத்துவத்தை நிலைநாட்ட,

 “கத்தி முனையை விட, பேனா முனை வலிமையானது என்ற வெற்றி முழக்கத்தோடு”

ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட, சமூக இயக்கங்கள் அரசியல் கட்சிகள் தொண்டு நிறுவனம் என 40 ஆண்டு சமூக நல்லிணக்கத்திற்காக அயராது உழைத்தேன். கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் தலைமை செய்தியாளராக பணியாற்றி வந்தேன். நமது இளம் இந்தியாவை காக்க, அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!! என்ற தாரக மந்திரத்தை தலையாய் சுமந்து வருகிறேன்…

 

நாளுக்கு நாள் நாம் தொழில் நுட்பரீதியாக வளர்ந்து வருகிறோம்! காலத்திற்கு ஏற்றார் போல் நமது புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழை டிஜிட்டல் வடிவில் 24 மணி நேரும் புதிய செய்திகளை உங்களுக்கு வழங்க, எங்கள் நிருபர்களும் பணியாளர்களும் தாயர் நிலையில் உள்ளனர்…

 

உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்திட இணைந்திருங்கள் www.pulanaivuexpress.com …

 

விரைவில் நேரலையில்…..

 

என்றும் தேசப்பணிகளில்,

தேசிய விருதாளரும், மனித நேய விருதாளருமான டாக்டர்.வி.அப்துல் ரசாக்,
ஆசிரியர் – புலனாய்வு எக்ஸ்பிரஸ்.