தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாக தலைவருமான டாக்டர் ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் தேவிபட்டினம் அருகே தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் கேக் வெட்டி காலை உணவு வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் ராஜசேகர்,மாவட்ட பொருளாளர் கேசவன்,மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்பாண்டியன்,
இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் மாரிதாஸ்,ஒன்றிய தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் துரைராஜா,திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் சதீஷ்குமார்,திருவாடானை ஒன்றிய செயலாளர் சேவியர்,மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ்வரன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் சதீஷ்பாண்டியன்,மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜண்டா பாண்டியராஜன், வெங்கடேஷ்,இராமநாதபுரம் ஒன்றிய இணைச் செயலாளர் தினேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி சுரேஷ் ஒன்றிய தலைவர் கமலேஷ்,இராமநாதபுரம் நகர பொறுப்பாளர் மகேஷ்குமார்,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய இணைச் செயலாளர் துரை தேவேந்திரன்,ஒன்றிய தொழிலாளர் அணி மகாலிங்கம்,ஆட்டோ கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

