



SDPI கட்சியை குறிவைக்கும் NIA சோதனையை கண்டித்தும் குறிப்பாக எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களது வீட்டுக்குள் அத்திமீறி நுழைந்து சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துகிற NIA வை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக இன்று(23/7/23) இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது அவர்கள் கண்டன உரையாற்றினார்கள், முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் Dr. ஜெமிலுநிஷா, மாவட்ட துணைத்தலைவர்கள் சோமு, சுலைமான் பொருளாளர் அசன் அலி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் நஜ்முதீன் அனைவரையும் வரவேற்றார், பெரியபட்டினம் நகர் தலைவர் பீர் முகைதீன் கண்டன கோஷம் எழுப்பினார் அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரஞ்சித் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் NIA வுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். இறுதியாக மாவட்ட செயலாளர் ஆசாத் நன்றி உரையாற்றினார்.


