கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் மே 12,13, ஆகிய இரண்டு நாட்கள் வோல்டு யுனியன் சிலம்பம் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் சப்ஜீனியர் ஒற்றை கம்பு பிரிவில் இராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இப்போட்டியில் இந்தியா சுவிட்சர்லாந்து பெல்ஜியம், இத்தாலி, ஶ்ரீ லங்கா ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது மாணவியுடன் சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் உடன் இருந்தார் இராமநாதபுரம் திரும்பிய மாணவிக்கு பெற்றோர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *