






இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அல் – கலம் சர்வதேசப் பள்ளிக்கு வருகை தந்த பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்தக் கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மிதி வண்டிப் பயணம் இந்தியா முழுவதும் மேற்கொள்ளும் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஆஷா மால்வியாவை பள்ளியின் தலைமை ஆசிரியர் பூபதி ராஜா பொன்னாடைப் போற்றியும், ஆசிரியைகள் விசாலாட்சி,அனிதா,சுதா ஆகியோர் பூச்செண்டு கொடுத்தும் மாணவ மாணவியர் வரவேற்பு பதாகைகளை ஏந்தியும் வரவேற்றனர்.பின் மாணவ-மாணவியருக்கு நல்லதொரு கருத்துகளைத் தடகள வீராங்கனை வழங்கினார்.பின் அங்கிருந்து செல்லும் போது இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.






