
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் அமைப்பதற்கு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சையது அப்பாஸ் தலைமையில் 30.12.22 அன்று நடைபெற்றது.கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் அமைப்பதற்கு ஐந்து நிலை குழுவாக தேர்வு செய்வதற்கும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட குழு தேர்வு செய்வதற்கும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மேலும் இதன் மூலம் நியமனக்குழு வளர்ச்சி குழு வேளாண்மை குழு கல்வி குழு பணிகள் குழு போன்று குழுக்களுக்கு நபர்களை முறையாக தேர்வு செய்து அதன் அடிப்படையில் கிராம வளர்ச்சி திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்.ஆனால் ஏர்வாடி ஊராட்சி தலைவர் இரண்டு குழுக்களுக்கும் முறையாக கிராம சபை கூட்டத்தில் நபர்களை தேர்வு செய்யாமல் தன்னிச்சையாக அலுவலகத்தில் அவருக்கு தேவையான நபர்களை மட்டும் தேர்வு செய்து கிராம சபை கூட்டத்தில் அறிவித்ததால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் தேர்வு குழு சம்பந்தமாக கேள்விகளை கிராம மக்கள் எழுப்பும் போது ஊராட்சி மன்ற தலைவர் முறையாக பதில் சொல்லாமல் உதாசீனமாக பேசுவதும் கடுகடுப்பாக நடந்து கொண்டதும் அப்பகுதியில் சலசலப்பு ஏற்படுத்தியது.அதனைத் தொடர்ந்து

சுகாதாரத்தை மேம்படுத்துதல் குழந்தைகள் பாதுகாப்பு பெண்கள் வளர்ச்சி குடிதண்ணீர் தண்ணிரைவு போன்ற வளர்ச்சி திட்டங்களை தேர்வு செய்தனர். இவை அனைத்தும் முறையாக தேர்வு குழு அமைத்து அதன் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் தமீமுன் அன்சாரி கூறுகையில்:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டமான கேரள மாநிலத்தில் சிறப்பாக நடைமுறைக்கு வந்துள்ளது அதனை தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் படி சமீபத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மூலம் குழுக்கள் தேர்வு செய்வதற்கு உத்தரவிட்டிருந்தார்.இதன் நோக்கம் கிராமங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது ஆகும் ஆனால் எங்கள் ஊரில் கிராமங்கள் வளர்ச்சி அடைவதற்கு சம்பந்தமான எந்த ஒரு திட்டங்களையும் ஜனநாயக ரீதியாக செயல்படுவது இல்லை என்றும் கிராம சபை கூட்டங்களில் முறையாக நபர்களை தேர்வு செய்யவில்லை என்றும் கிராமசபை கூட்டங்களில் குறைகளை கூறினால் அதை செவி சாய்க்காமல் உதாசினமாக பதில் அளிப்பது போன்ற செயல்பாடுகளை ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்.இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் மனுக்கள் ஆகவும் வழங்கியுள்ளோம்.ஆகையால் ஜனநாயக ரீதியாக கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களின் ஆலோசனையை கேட்டு அறிந்து மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் இக்குழுக்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம சபை நடத்தும் முறைகளையும் கிராம மக்களிடம் அணுகும் முறைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கிராம மக்களின் சார்பாக நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் வைக்கிறோம் என்று கூறினார்.