
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் உள்ள, நகராட்சி தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திமுக நகர் இளைஞர் அணி சார்பில் நகர்மன்ற துணைத் தலைவரும்,இளைஞரணி அமைப்பாளருமான வழக்கறிஞர் VS.ஹமீது சுல்தான் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
இளைஞர் அணி துணை அமைப்பாளர் 17-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் பயாஸ்தீன், நயீம்,சுபியான் அல்லாபாக்ஸ்,முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது,துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி மற்றும் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் கூறுகையில்:-
அனைவரும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கும் போது அருகில் தண்ணீரை வைத்து பாதுகாப்பாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உட்பட தனியார் துப்புரவு தொழிலாளர்களும் கலந்து கொண்டு தீபாவளி பரிசை பெற்று சென்றனர்.
