இராமநாதபுரத்தில் அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா,எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.இதை கண்டித்து இராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் செய்யது முகம்மது இப்ராஹிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜிக் ரஹ்மான் தொடக்க உரையாற்றினார்.மனிதநேய ஜனநாயக கட்சி பாரூக்,ஆதி தமிழர் கட்சி பாஸ்கரன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் செயலாளர் சிராஜ்தீன்,தமிழர் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், ஐக்கிய ஜமாத் மதுரை மாவட்ட செயலாளர் காஜா மைதீன்,பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின்,ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக பேச்சாளர் ஜாகீர் உசேன்,நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை அனீஸ் பாத்திமா, த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை மில்லத் பிர்தவுஸ்,எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல்,இந்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி செய்யது ஜமாலி ஆகியோர் பேசினர்.இதில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமாத் பிரமுகர்கள்,முஸ்லீம் இயக்கங்களின் நிர்வாகிகள்,இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர் தலைவர் முஹம்மது கனி நன்றி கூறினார்.