
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ கட்சி அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் சோதனை என்ற பெயரில் அத்துமீறி கைது செய்த ஒன்றிய அரசின் ஏவல் துறையான தேசிய புலனாய்வு முகவை (NIA) மற்றும் அமலாக்க துறையை (ED) கண்டித்து இராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத், இயக்கம் மற்றும் கட்சிகள் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

இதில் ஐக்கிய ஜமாத், INTJ, IMMK, TMMK, NTF, YNTJ, IUML, MJK, SDPI, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் பேரவை, தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கலந்து கொண்ட கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ கட்சி அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் சோதனை என்ற பெயரில் அத்துமீறி கைது செய்த ஒன்றிய அரசின் ஏவல் துறையான தேசிய புலனாய்வு முகவை (NIA) மற்றும் அமலாக்க துறையை (ED) கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்ஷா அல்லா இராமநாதபுரம் அரசு பணிமனையில் 24.09.22 அன்று மாலை 4 மணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
