
இராமநாதபுரம் மாவட்டம் அஞ்சுகோட்டை உள்கடை கரையக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ நல்லாண்டி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில்,என் பூமி என் கடமை தேவகோட்டை,மற்றும் அக்னி சிறகுகள் நண்பர்கள் குழு அஞ்சுகோட்டை சார்பில்,மரக்கன்று வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.கும்பாபிஷேக நிகழ்வுக்கு வந்திருந்த சுற்றுவட்டார கிராம பொது மக்களுக்கு சுமார் 600 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதில்,தேசிய மனித உரிமைகள் (சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா) தமிழக மாநில தலைவர்,நம்புதாளை பாரிஸ், மாநில தனி செயலாளர் வாசு.ஜெயந்தன்,வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை முகவை மாவட்ட செயலாளர்,ஹபீப்முகம்மது, நம்புதாளை சிவன் கோவில் டிரஸ்டி ஆர்.வாசு,அக்னி சிறகுகள் நண்பர்கள் குழு வேலவன்,சேகர்,செல்லமுத்து,என் பூமி என் கடமை அறக்கட்டளை பால தண்டாயுதபாணி,அறிவழகன், பாரதிதாசன்,உள்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
