
இராமநாதபுரம்,ஆக.15:-
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் தெற்கு மாவட்த்தின் பார்த்திபனூர்,பரமக்குடி,பெரியபட்டினம் மற்றும் கீழக்கரை ஆகிய 4 இடங்களில் இரத்ததாண முகம் நடைபெற்றது இதில் 134 கொடையாளர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.கீழக்கரை பிஸ்மில்லா நகர் கிளையின் சார்பாக கீழக்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ஆரிஃப் கான் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தினாஜ் கான்,மாவட்ட துணைச் செயலாளர் சாபிர் மற்றும் கீழக்கரை கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இரத்ததான முகாமை கீழக்கரை காவல்துணை கண்காணிப்பாளர்
சுபாஷ் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
