
இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியினர் நாளை 30-ம் தேதி நடைபெற இருக்கும் போதை பொருள் ஒழிப்பு போராட்டத்திற்கு அரண்மனை முன்பாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர்.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் முத்துராமன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் அக்கீம் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.இந்நிகழ்ச்சியில் மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன்,மாவட்ட அமைப்பு செயலாளர் ஆடிட்டர் சதாம் உசேன்,நகர தலைவர் சதீஷ், மாணவர் சங்க தலைவர் கவின் ராகேஷ், உட்பட பலர் கலந்து கொண்டு துண்டு பிரச்சாரங்களை விநியோகம் செய்தனர்.
