
இராமநாதபுரம் ஐப்ரீஸ் மீட்டிங் ஹாலில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாவட்டத் தலைவர் உமர் பாரூக் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது. முன்னதாக மாவட்டப் பேச்சாளர் பரக்கத் அலி உரையுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் துணைத்தலைவர் ஆல்பா நசீர், மாநிலச் செயலாளர் முஹம்மது ஃபரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறைவன் நாடினால் எதிர் வரும், 2023 ஜனவரி 8 – அன்று திருச்சியில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) சார்பாக நடைபெறவுள்ள மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் – என்ற சிறப்பு மாநில மாநாட்டின் பணிகள் குறித்தும், நபிகள் நாயகத்தை அவதூறாக பேசி நாட்டின் அமைதியை குழைத்த பாஜகவின் நுபுர் சர்மாவின் மீது உரிய வழக்கு பதிந்து சிறையில் அடைக்க வலியுறுத்தி பேசியதோடு, தமிழக மக்களுக்கு நபிகள் நாயகத்தின் உண்மையான வரலாற்றையும், அவர்களது சிறந்த குணங்களைப் பற்றியும் விளக்குவது நமது கடமை என்பதை வலியுறுத்தியும் மாநிலத் துணை தலைவர் ஆல்பா நசீர் உரை நிகழ்த்தினார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு,
நவம்பர் மாதத்தில் NTF நிறுவனத் தலைவர் அறிஞர் P.J. பங்கேற்கும் மாமனிதர் நபிகள் நாயகம் சிறப்பு விளக்கப் பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
மாவட்ட பேச்சாளர் சத்தார் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கீழக்கரை, முஹம்மது ஃபரூஸ் தலைவர்,
நம்புதாளை, முஹம்மது அஸ்வர் செயலாளர, பாம்பன், முஹம்மது கான், பொருளாளர் பனைகுளம் அமானுல்லாஹ் துணை தலைவர், இராமநாதபுரம், செய்யது அன்வர், பெரியப்பட்டிணம் அஜ்மல் கான், தொண்டி ஷேக் ஃபரீத் ஆகியோர் துணை செயலாளர்களாக
நியமிக்கப்பட்டார்கள்

செய்தி வெளியீடு
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
98424 23752
94434 65765 👇🏻👇🏻