இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவராக பொறியாளர் சுல்த்தான் சம்சுல் கபீர், செயலாளராக சுப்புரமணியன், பொருளாளராக சிவகார்த்திக், அட்வகேட் கேசவன், ஹசனுதீன், நூஹு அப்துல் காதர், எபன் பிரவீன் குமார், கண்ணன், சதகத்துல்லா உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. அதில் ஹமீதியா பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி சல்மத் ரிபா, இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி மாஹினா, இளம் சாதனையாளர் இன்சாப் முஹம்மது உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசு வழங்கபட்டது.

Rtn.PDG.Major Donor.Dr.சின்னதுரை அப்துல்லாஹ் இன்ஜினியர் M.பாபு Rtn.PAG.MPHF. Dr.A.அலாவுதீன் பேராசிரியர் முஹம்மது ஆசிப் (முஹம்மது சதக் இன்ஜினியரிங் காலேஜ்) இவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
Dr.சின்னதுரை அப்துல்லாஹ் இவர் குறிப்பிடுகையில் உலகம் முழுவதும் போலியோ ஒழிப்பில் ரோட்டரி கிளப் தீவிர களப்பணி செய்து முற்றிலும்
ஒழித்துள்ளோம். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் சில போலியோ நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அங்கும் போலியோவை முற்றிலும் ஒழிப்போம். போலியோ இல்லா உலகை படைப்போம்.
சமுக பணி செய்ய வருபவர்கள் தங்கள் வீட்டில் முதலில் செய்யட்டும், பின் குடும்பத்தில் செய்யட்டும், அதன்பின் ஊரில் செய்யட்டும் என்றார்.
பேராசிரியர் முஹம்மது ஆசிப் அவர்கள் கூறியதில் தாய் தந்தையரை மதித்து நடக்கும் பிள்ளைகள் இவ்வுலகத்திலும் புகழ் பெறுவார்கள், மறு உலக வாழ்க்கையிலும் உயர் பதவி பெறுவார்கள். கல்வி கற்பிக்கும் ஆசிரிய பெருமக்களை மனதில் என்றும் வைத்து போற்றக் கூடியவர்கள், அவர்கள் தான் நம்மை சாதனையாளராக மாற்ற கூடியவர்கள்.
DIRECTOR :
Community Service : Rtn.PP.PHF. Dr.செய்யது ராசிக்தீன், சுந்தரம், அப்பாஸ் மாலிக், செல்வநாராயணன், தர்மராஜ், ராஜபாண்டி, ஹசன், Rtn.ஷேக் ஹுசைன், சித்ர வேல், கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு கெளரவ தலைவர் தொழிலதிபர் PRL.சதக் அப்துல் காதர், செயலாளர் ஷேக் ஹுசைன், PRL.சதக் இலியாஸ், சீனி இப்ராகிம், சுபைர், மற்றும் தொழிலதிபர் அமீர், நகர திமுக செயலாளர் பசீர் அஹமத், திமுக இளைஞரணி அமைப்பாளர் இப்திகார், உதவி சேர்மன் ஹமீது சுல்தான், சுஹைபு, மற்றும் முக்கிய பிரமுகர்கள் PVM அறக்கட்டளை நிறுவனர் அப்துல் ரசாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
98424 23752
94434 65765 👇🏻👇🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *