இராமநாதபுரம்,ஜீலை.16:-
இராமநாதபுரம் பிவிஎம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பிவிஎம் மனநலக்காப்பகத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் மதுரை கிளையும் பில்லியன் கார்ட்ஸ் பிட்டிங் பவுண்டேசன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் இன்று நடந்தது.இந்த முகாமிற்கு பிவிஎம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் அப்துல் ரசாக் தலைமை வகித்தார்.அறங்காவலர்கள் செய்யது அஹமது,மஹசியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர் ஜெயவந்த்,ஜோயல்,மகமாயி மற்றும் சென்னை அப்பல்லோ பில்லியன் கார்ட்ஸ் பிட்டிங் சரவணக்குமார்,மதுரை பில்லியன் கார்ட்ஸ் பிட்டிங் பவுண்டேசன் விஜயக்குமார்,சனாயா ஆகியோர்கள் மருத்துவ முகாமை நடத்தினர்.இந்த முகாமில் பிரசர்,இரத்தப் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை,உயரம் மற்றும் எடை சம்பந்தமான பரிசோதனைகள் மிக சிறப்பாக நடந்தது.பிவிஎம் அறக்கட்டளையின் மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அரபாத்,நகர் தலைவர் முஹம்மது ஷாநாஸ் கான்,மருத்துவ சேவை அணியின் ஆலோசகர் கிதிர் முஹம்மது,சமூக நலப் பணியாளர் லியா,உள்ளிட்டோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.பிவிஎம் மனநல மறுவாழ்வு இல்லத்தின் தலைமை சமையலர் உம்முல் சல்மா நன்றி கூறினார்.
