
இராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்கார தெருவில் அனைத்து விதமான வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக இன்ஃபினிட்டி யூனிசெஃஸ் ஹேர் &பியூட்டி ஸ்டுடியோ ஆண்கள் அழகு நிலையத்தை இராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் ஆர்.கே.கார்மேகம்,துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ்,கீழக்கரை நகர்மன்ற துணைத்தலைவர் வழக்கறிஞர் V.S.ஹமீது சுல்தான்,கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள்,தொண்டி சேர்மன் மகன் நவ்புல், கீழக்கரை நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன்,தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் கே.ஜே.பிரவீன்குமார்,ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை இன்ஃபினிட்டி குழுமத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.இந்நிறுவனம் தனது முதல் கிளையை கீழக்கரையில் துவங்கி தற்போது வரை மிகச் சிறப்பாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
