

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரியபட்டினம் நகர் சார்பாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு நடத்தும் “மக்கள் சங்கமம்” மாநாடு வருகின்ற ஜூன் 30, மற்றும் ஜூலை 1 அன்று பெரியபட்டினம் தர்ஹா திடலில் நடைபெற உள்ளது.அதன் ஒரு பகுதியாக இன்று காலை 6 மணி அளவில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.மாரத்தான் போட்டியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது ரசின் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள்.


பெரியப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிலையத்தில் தொடங்கி முத்துப்பேட்டை,சேது நகர், மங்கம்மா சாலை வழியாக மீண்டும் பெரியபட்டினம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய போட்டியின் தொலைவான 7 கிலோமீட்டர் தூரத்தை கலந்து கொண்ட மொத்தம் 200 நபர்களில் முதல் இடத்தை ஆசிப்,இரண்டாம் இடத்தை யூசுப்,மூன்றாம் இடத்தை மைதீன்,பெற்றனர்.இந்த மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 1-ம் தேதி நடக்கின்ற மிகப்பெரிய மக்கள் சங்கமம் மாநாட்டில் பரிசு வழங்கப்படும்.மேலும் மாரத்தான் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்த 103 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
