வரலாற்று சிறப்புமிக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் வரலாற்றை நினைவு கூறுதல் நிகழ்ச்சி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.தமிழர் வரலாற்றில் கண்ணியத் தென்றல் பச்சைத் தமிழர் காயிதே மில்லத் மாபெரும் கருத்தரங்கமாக விழா ஜொலித்தது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர்முஹைதீன் தலைமை வகித்தார்.முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் PRL ஹாமீது இபுராஹிம்,கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் கௌரவ தலைவர் டாக்டர் PRL சதக் அப்துல் காதர்,இ.யூ.மு.லீ மாவட்ட தலைவர் வருசை முகம்மது,நகர் தலைவர் தொழிலதிபர் சேகு ஜமாலுதீன்,நகரப் பொருளாளர் ஹபீப் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வரவேற்புரை நிகழ்த்தினார்.தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,இ.யூ.மு.லீ மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.நேஷனல் ப்ரஸ்&மீடியா பெடரேஷன் தேசியத் தலைவரும்,புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழின் ஆசிரியரும் PVM மனநலக்காப்பகத்தின் நிறுவனருமான டாக்டர்.அப்துல் ரசாக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.விழாவில் தொழிலதிபர் இலியாஸ்,கவுன்சிலர் சேக் உசேன், கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகிகள், கீழக்கரை முக்கியஸ்தர்கள்,அரசியல் கட்சி பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள்,அரசு அலுவலர்கள்,பேராசிரியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.இ.யூ.மு.லீ மாநில பொருளாளர் ஷாஜஹான் நன்றியுரை கூறினார்.விழாவில் காயிதே மில்லத் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தலைவர்.காமராஜரை முதலமைச்சராக்கி அழகு பார்த்தவர்,இ.யூ.மு.லீ சட்டசபையில் எதிர்கட்சியாக திகழ்ந்த ஒரு மாபெரும் இயக்கம்.இந்திய விடுதலைக்கு முஸ்லீம்களின் பங்கே முதன்மையானது.இந்திய திருநாட்டை சுதந்திரமடைய முஸ்லீம்கள் தான் அப்போதைய நாணய மதிப்பிலே கோடி கோடியாக வழங்கியவர்கள்.இந்தியா கேட் முஸ்லீம்களின் இந்திய விடுதலைக்கான போராட்ட தியாகங்களை நினைவு கூறும் வகையில் 75 சதவீதம் முஸ்லீம்களின் பங்கே ஆகும்.


வரலாற்றை மறந்தவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பதுதான் வேடிக்கையான விஷயம்.முஸ்லீம்கள் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் இந்திய விடுதலைக்காக போராடியதை போன்று மீண்டும் இஸ்லாமியர்கள் களம் காண்பதே ஜனநாயக கடமை. ஒரு கையில் இறைவேதம் மறு கையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி பிடித்து இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும்.இது போன்ற முழக்கங்கள் பச்சை தமிழர் காயிதே மில்லத் கருத்தரங்கில் அனல் பறக்கும் கருத்துக்களை அள்ளி பொழிந்தனர்.கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சிக்காக முழு வீச்சில் ஈடுபட்டதாக மக்கள் பேச்சு.
அழைப்பின் மகிழ்வில் சபிக்குர் ரஹ்மான்,அப்துல் ஜப்பார், சாதுல்லாக்கான்,சிராஜுதீன், நெய்னா முகம்மது நிகழ்ச்சி பணிக்குழு குருவாடி அன்சாரி,ஹதியத்துல்லா,நவ்பாதுஷா ஆலிம்,ஸாலிக் ரஹ்மான்,ஆஷிக் ஹூசைன்,குத்புதீன் ராஜா ஹசன்,காசிம், அஜ்மீர்,சாபீர்,பகுருல் பயாஸ்,ஹள்வத்தி


சிறப்பு செய்தியாளர்:பிஸ்மில்லா கான்
செய்தியாளர்:சீனி இபுராஹிம்.
ஒளிப்பதிவாளர்:பாக்கியராஜ்.