
மேலத்தெரு பல்லாக்கு ஒலியுல்லா சாலை 22.6.2022, அன்று மாலை. 5.00 மணியளவில், M.K.E.உமர், மக்கள் சேவை அறக்கட்டளையின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த இம்பாலா சுல்தான் இவரது மகன் இன்ஷாப் முஹம்மது அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கீழக்கரை வட்டாச்சியர், சரவணன் மாவட்ட அரசு காஜி. V.V.A.சலாஹுத்தீன் மற்றும் கிழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன், காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், கீழக்கரை நகராட்சி பொறியாளர் மீரா அலி, இதில் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை கீழை. ஜஹாங்கீர் அருஸி தொகுத்து வழங்கினார். லெப்பை தம்பி நன்றி உரையுடன் நிறைவுபெற்றது.

செய்தியாளர்:சீனி இபுராஹிம்.
ஒளிப்பதிவாளர்: முகம்மது நிசார்.