கீழக்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வளர்ச்சி வாரிய செயலாக்க வளர்ச்சி வாரியம் மதுரை கோட்டம் சார்பாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் மதிப்பீடு 2,10,000 ரூபாய்க்கான 25 பயனாளிகளுக்கான உத்தரவை இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் 20/06/2022 அன்று கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் வழங்கினார்.இவ்விழாவிற்கு நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா,தலைமை வகித்தார்.

திட்ட உதவி நிர்வாகப் பொறியாளர் அசோகன்,மற்றும் உதவிப் பொறியாளர் ரீட்டா,துணை சேர்மன் ஹமீது சுல்த்தான்,அனைத்து நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் நகராட்சி அரசு அலுவலர்கள்,பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கீழக்கரையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற கேள்விக்கு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக MLA கூறினார்.கீழக்கரையில் குப்பையை அகற்றும் டிராக்டர் இல்லாத பட்சத்தில் முகம்மது சதக் டிரஸ்ட் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஆகியோர் மூலமாக வழங்கிய டிரைலருடன் கூடிய டிராக்டரை வைத்துத்தான் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

நகராட்சிக்கு புதிதாக டிராக்டர் வழங்கப்படுமா?என்ற கேள்விக்கும் மாவட்ட நிர்வாகத்தில் கோரிக்கையில் உள்ளது, விரைவில் கீழக்கரை ஊர் சார்ந்த நலத் திட்டங்களை நிறைவேற்றித் தருவேன் எனவும் MLA உறுதியளித்தார்.
கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் சேக் உசைன்,மற்றும் டல்சி,ஆகியோர் கடற்கரைத் தூய்மையாக்கும் திட்ட கோரிக்கையை MLA-விடம் எடுத்துக் கூறினர்.
அதற்கு கீழக்கரை மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்போம் இது மக்களுக்கான ஆட்சி என்று சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.கீழக்கரையில் குப்பையை அகற்ற உதவி வரும் முகம்மது சதக் டிரஸ்ட் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பிற்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்:சீனி இபுராஹிம்.

ஒளிப்பதிவாளர்: முஹம்மது நிசார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *