
கீழக்கரை:
ராமநாதபுரம் பிவிஎம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பிவிஎம் மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு இல்லம் புதிய கட்டடம் கட்டுமான பணிக்கான துவக்க விழா சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகளின் நல அதிகாரி டாக்டர் கதிர்வேலு தலைமையில் நடந்தது.



விழாவில் ஆலிம்கள் ஷேக் உசேன், செய்யது அபுதாகீர் துஆ ஓதினார்கள். பங்கேற்றவர்களை பி.வி.எம்.அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் அப்துல் ரசாக் வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார். திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய சேர்மனும் திமுக ஒன்றிய செயலாளர் புல்லாணி, தாதேனந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் கோகிலா ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் பேச்சு பயிற்றுனர் கனகராஜ்,
பிவிஎம் அறக்கட்டளை தலைவர் பக்கீர் முகம்மது, பொது செயலாளர் ஜெ.எஸ்.ஹமீது, திட்ட இயக்குனர் அல்தாப் உசேன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

வழுதுார் துபாய் தொழிலதிபர் ரஜபுதீன் அவர்கள் கட்டுமானத்திற்கான முதல் பணியை துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஏசியன் கிளாஸ் ஹவுஸ் பில்டிங் மெட்டிரியல் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் முஜீபுர் ரஹ்மான், கொட்டியகாரன் வலசை ஜமாத் தலைவர் அமானுல்லா, பொருளாளர் மைதீன் சீனி, ஜமாத் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ், கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுரவ தலைவர் பன்னாட்டு தொழிலதிபர் டாக்டர் பி.எல்.ஆர். சதக் அப்துல் காதர் அவர்களின் பிரதிநிதிகள் செயலாளர் ஷேக் உசைன், உதவி செயலாளர் சீனி இபுராகிம் ஆகியோர்களும், துபாய் தொழிலதிபர் டாக்டர் எஸ்.எம்.பாரூக் அவர்கள் சார்பாக அவரின் சகோதரர் லியாகத் அலி, ராமநாதபுரம் ரியல் எஸ்டேட் அதிபர் அப்பாஸ்கான், பிவிஎம் அறக்கட்டளை அறங்காவலர் செய்யது அஹம்மது, பிவிஎம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அராபத், நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் மாநில பொருளாளர் சிவசங்கரன், கீழக்கரை தாலுகா செயலாளர் முகம்மது பரூஸ், கீழக்கரை நகர் செயலாளர் முஹம்மது நிஷார் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகளை டி.எப்.எல். கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர்கள் ஹமீது ஹூசைன், முஹம்மது ஜமாலுதீன் செய்திருந்தனர். ஏற்பாடுகளை பி.வி.எம். அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் மஹசியா செய்து இருந்தார். பி.வி.எம். அறக்கட்டளை சமூக நலப்பணியாளர் லியா நன்றி கூறினார்.

செய்தி வெளியீடு
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
98424 23752
94434 65765 🌹🌹👇🏻👇🏻
