
இராமநாதபுரம்,ஜூன்.3:-
இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் தற்காலிகமாக முடக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்நடந்தது.பாப்புலர் ஃப்ரண்ட்டின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கையை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 04:30 நடைபெற்றது.மக்கள் பேரியக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, பாசிச பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை சமரசமில்லாமல் எதிர்த்து வருவதால்,பாஜக அரசு பழிவாங்கும் நோக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் சட்டப்பூர்வமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வங்கிக்கணக்குகளை சட்ட விரோதமாக முடக்கியுள்ள அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சேக் தாவூது தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷஹீத் கண்டன கோஷம் எழுப்பினார்.ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ் கான்,எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லாஹ், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஜெமிலுன் நிஷா,எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஹனீப், எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் நஜிமுதீன்,எஸ்டிபிஐ கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கலாம் ஆசாத் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்ராஹிம், எஸ்டிபிஐ கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் அப்துல்லா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் நன்றி கூறினார்.கண்டன உரையில், அமலாக்கத்துறையின் இந்த சமீபத்திய நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறைகளின் ஒரு பகுதிதான்.மக்கள் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள்,ஊடகங்கள் மற்றும் நாட்டிலுள்ள ஆளும் கட்சியை விமர்சிக்கும் எந்த ஜனநாயகக் குரல்களையும் ஒடுக்குவதற்கு அரசியல் எஜமானர்களின் கைக்கூலியாக இது போன்ற ஏஜென்சிகள் செயல்படுகிறது என்பது மீண்டும் தெளிவாகிறது.பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற தேசிய அளவில் பரந்து விரிந்துள்ள சமூக இயக்கத்தின் செயல்பாட்டிற்கு 13 ஆண்டுகளில் அமலாக்கத்துறையின் கூற்றுப்படி சொல்லப்பட்டுள்ள வைப்புத்தொகை என்பது சாதாரணமானது.பாப்புலர் ஃப்ரண்ட் முன்னுதாரணமான பல நிவாரணம்,மீட்பு பணிகள் மற்றும் சேவைகளை செய்து நாடு எதிர்கொண்ட பெரும் பேரிடர்களுக்காக மக்களிடம் நிதி வசூலித்த வைப்புத்தொகையும் இந்த தொகையில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.அமலாக்கத்துறை கூறியுள்ள புள்ளிவிபரங்கள் வியப்பளிப்பதாக இல்லை என்று தெரிவித்தனர்.
