
இராமநாதபுரம் மாவட்ட பா.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயலர் தேனி சை.அக்கிம் தலைமை வகித்தார்.மாவட்ட பொறுப்பாளர்கள் ஜீவா,சந்தான தாஸ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் ஆயிஷா வரவேற்றார்.மாநில பொதுச் செயலர் வடிவேல் ராவணன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைய தேர்தல் பணியாற்ற வேண்டும்.ஒவ்வொரு ஒன்றிய,நகர் செயலாளர்கள் தங்கள் பகுதி மக்களின் பொது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கை மூலம் புதிய தொண்டர்களை கட்சியில் இணைக்க முடியும்.மாவட்ட செயலரின் பணிச்சுமையில் கட்சி நிர்வாகிகள் பங்கு கொள்ள வேண்டும் என்றார்.ஒவ்வொரு பகுதியிலும் கட்சி கொடி ஏற்றி அப்பகுதி மக்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நகர செயலர் லோகநாதன்,மது ஒழிப்பு போராட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட பொருளாளர் ஆயிஷா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஒன்றிய பொறுப்பாளர்கள் இஸ்மாயில்,சதாம் உசேன்,நகர் பொறுப்பாளர்கள்,லோகநாதன் மாவட்ட துணை செயலர் ராசிக்,மாவட்ட பசுமை தாயக செயலர் கர்ண மகாராஜன் இராமநாதபுரம் நகர் தலைவர் சதீஷ்,இராமநாதபுரம் ஒன்றிய அமைப்பாளர் துல்கர்,கீழக்கரை மீனவர் சங்க தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
