
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி தோப்பு நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு அரசு பட்டா வழங்காததால் இவருடைய அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதி மின் இணைப்பு வசதி போன்றவை எட்டாக்கனியாகவே உள்ளன அதுமட்டுமல்லாமல் இவர்கள் அனைவரும் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு பிரதமர் இலவச வீட்டுமனை திட்டத்தில் ஊராட்சி செயலாளர் இடம் கேட்டால் பட்டா கொண்டு வந்து தாருங்கள் உங்களுக்கு பிரதமரின் இலவச வீடு திட்டம் மூலம் வீடு அளிக்கிறோம் என்று கூறுகின்றனர் 15 வருடமாக வாழ்ந்தாலும் இவருக்கு வாழ்விடம் சொந்தம் இல்லை என்பது வேதனை அளிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியினர் மக்கள் போராட்டத்தை கையிலெடுத்து என்று மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் அக்கீம், மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் ஆயிஷா மாவட்ட மகளிர் சங்க தலைவி கேர்லின் முன்னிலையில் சிறப்புரை ஆற்ற மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார் இந்நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி தோப்பு நகர் பகுதியில் குடியிருந்து வரும் 100 குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் மாவட்ட அமைப்பு செயலாளர் ஆடிட்டர் சதாம் உசேன் கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன் நகர துணைத் தலைவர் சதீஷ் நகர செயலாளர் முத்துராமன் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில் ஒன்றிய துணைச் செயலாளர் துல்கர் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என் நிகழ்ச்சி முடிந்த பின்பு மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் ராஜீவ்காந்தி தோப்பு நகர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தனர். அதன்பின்பு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் அவர்கள் இல்லத்தில் சந்தித்து அவர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சி இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றே தீரும் என ஆறுதல் கூறினார் அவருடன் மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
