ராமநாதபுரம்,ஏப்.20:-
ராமநாதபுரத்தில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஹம்மது (ஸல்) முஸ்லிம் ஜமாத் சார்பில் மஸ்ஜித் ஜமாத் திடலில் நடந்தது.இமாம் ரஹ்மத்துல்லா கிராஅத் ஓதினார்.தமுமுக மாவட்ட தலைவர் அன்வர் அலி தலைமை வகித்தார். இஸ்லாமிய அழைப்பாளர் முஹம்மது ஹனிப் ரஷாதி வரவேற்றார்.தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் சுல்த்தான்,பிவிஎம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் சேர்மன் ஹைதர் அலி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துகாட்டாக இப்தார் நிகழ்ச்சி விளங்குகிறது.மதநல்லிணக்கத்தை பேணுவது ஒவவொரு இஸ்லாமியர்களின் கடமையாகும்.மனிதார்களாகிய நாம் எந்த சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாமல் இந்திய ஒருமைப்பாட்டை முன்னிருத்தி அனைவரும் வாழ வேண்டும்.அதுவே இந்திய தேசத்திற்கு பெருமையாகும். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், ஒற்றுமை போன்ற கருத்துகளை முன்வைத்து பேசினார்.

இராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம் பேசுகையில்,நான் எத்தனையோ இப்தார் நிகழ்ச்சியில் கலந்து உள்ளேன்.ஆனால்,இந்த இப்தார் நிகழ்ச்சி ஒரு மாநாட்டை போல் மதநல்லிணக்க நிகழ்ச்சியாக காண முடிவதை கண்டு பெருமை கொள்கிறேன்.இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்குபெறுவது நல்ல உறவுகளையும்,சமூக பண்பாளர்களையும் சந்திக்க கூடிய வாய்ப்பாக உள்ளது,என பெருமதித்தோடு பேசினார். இப்தார் நிகழ்ச்சியில் நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர்,புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் ஆசிரியர்,பிவிஎம் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் அப்துல்ரசாக்,நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா,ராமநாதபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் பாதிரியார் பிரேம் கிறிஸ்து தாஸ்,ராமநாதபுரம் நமச்சிவாயம் அறக்கட்டளை முத்துகிருஷ்ணன்,தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஜாஹிர் உசேன்,திமுக மாநில செயற்குழு உறுப்பினர் அஹம்மது தம்பி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வருசை முகம்மது, விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் முஹம்மது யாசின், தமுமுக மாவட்ட செயலாளர் பாகிர் அலி,மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிநாத துரை,எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீல், இந்திய கம்யுனிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகபூபதி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநில இணை செயலாளர் சிராஜூதீன்,தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரஞ்சித், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஹக்கீம்,பெரிய முஹல்லம் ஜமாத் தலைவர் ஹாருன் ரசீது,நகராட்சி கவுன்சிலர்கள் மணிகண்டன், ராஜாராம் பாண்டியன்,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், சக்கரக்கோட்டை ஜமாத் தலைவர் துங்கு அப்துல் ரஹ்மான்,ஜி.கே.லா பவுண்டேசன் மூத்த வழக்கறிஞர் ஷேக் இபு்ராகிம்,வழக்கறிஞர் அப்துல் ஹாலித்,முன்னாள் கவுன்சிலர் ஆரிப்ராஜா உட்பட மும்மதங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

கலந்து கொண்டவர்கள் பெருமிதத்தோடு மட்டில்லா மகிழ்ச்சி என கூறி விடைபெற்று சென்றனர். தமுமுக நகர் தலைவர் மன்சூர் அலி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *