இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21-வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக தென்னை மரம் சின்னத்தில் எஸ்.சித்திக் போட்டியிடுகிறார்.அவர் கூறுகையில் 21-வது நகராட்சி பொதுமக்களிடம் நான் நம் வார்டு சார்ந்த அடிப்படை கட்டமைப்புகான கழிவுநீர் கால்வாய் அமைத்தல்,மின்சார சீரமைப்பு,டெங்கு கொசுக்களை ஒழித்தல், தெருநாய்களை கட்டுப்படுத்துதல், ரேஷன் பொருட்களை முறையாக வழங்குதல் மற்றும் தரமாக கிடைப்பதை உறுதி செய்தல், குப்பைகளை சுத்தமாக நீக்குதல், குடிநீர் குழாய்கள் அமைத்தல் போன்ற அடிப்படை தேவைகளை சரி செய்வதற்கு வெற்றி பெற்றவுடன் அயராது பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.21வது வார்டு உறுப்பினர்கள் எனக்கு தென்னை மரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து உங்களுக்காக உழைக்க என்னை பணிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.கீழக்கரை நகராட்சி 21-வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் எஸ்.சித்திக் தனக்கு நகர் மன்ற உறுப்பினர் பதவி வேண்டாம். பொறுப்பை மட்டும் தாருங்கள். உங்களுக்கு உழைக்கிறேன் என அதிரடியாக ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் தற்போது அது கீழக்கரை நகர் பகுதியில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
புதுமையாக சிந்திக்கக்கூடிய இவர் வெற்றி பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
