
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக 8-வது வார்டில் முகமது அனிபா தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார்.சமூக சிந்தனையும் பொது சேவைகள் அதிகம் செய்யக்கூடியவர் இவரை பெருவாரியான மக்கள் ஆதரித்துள்ளனர்.முகமது அனிபா கூறுகையில் வார்டில் உள்ள மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவித்து உள்ளீர்கள் அதேபோன்று அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார் வெற்றி பெற்றவுடன் கழிவுநீர் பிரச்சனைகள் தண்ணீர் பிரச்சனைகள் மின்விளக்கு பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.