ராமநாதபுரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கீழக்கரையில் நகராட்சியின் 17வது உறுப்பினர் பதவிக்கு தென்னைமரம் சின்னத்தில் அயூப் கான் போட்டியிடுகின்றார்.
பல ஆண்டு காலமாக இரு ஆளுமை கட்சிகள் நகராட்சியை ஆண்டு வருகிறது. கீழக்கரைக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் இருப்பதினால் ஊர் மக்கள் நலன் கருதியும் 17வது வார்டு மக்களின் நலனுக்காக உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று கூறியுள்ளார். அயுபக்கான் வெற்றி பெற்றால் 17வது வார்டு பொதுமக்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளார் . நீண்டகாலமாக கடற்கரை பகுதியில் இருக்கக் கூடிய பிரச்சினை சரியான மின் விளக்குகள் அமைக்கவில்லை வெற்றி பெற்ற உடனே கடற்கரைப்பகுதியில் விளக்குகள் அமைத்து சீரமைத்து பூங்கா கொண்டு வர முயற்சி செய்கிறேன்.
மழை கால நாட்களில் கழிவுநீர் கால்வாய்கள் உடைந்து அப்பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு அத்தியாவசிய தேவைக்கு தினந்தோரும் சாலையைப் பயன்படுத்தும் மாணவர்களும், பொதுமக்களும் துர்நாற்றம் காரணமாக கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். கழிவுநீர் ஓடிக்கொண்டே இருக்கின்றது காரணம் 16000 தண்ணீர் பயன்பாடு இருக்கக்கூடிய இடத்தில் 400 மீட்டர் தூரத்தில் 2.1/2 அடி மட்டுமே கால்வாய் பகுதி உள்ளது. வெற்றி பெற்றவுடன் கால்வாய் பகுதியை விரிவாக்கி கழிவுநீர் வெளியில் ஓடாமல் நீர்த்தேக்க பெட்டியை அமைத்து எவ்வித இடையூறும் இல்லாமல்
கழிவு நீர் தேக்கத்தை சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். உயர் மின் விளக்குகள் அமைந்திருக்கும் வயர்களை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய இடங்களில் சரி செய்ய எவ்வித பாதிப்பும் இல்லாமல் குழாய் அமைத்து கொடுத்து சரி செய்யப்படும்.எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாமல் சுயேச்சையாக 17வது வார்டு மக்களின் நலனுக்காகவும் சுகாதாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்களின் மீது நம்பிக்கை வைத்து நான் தென்னை மரம் சின்னத்தில் வேட்பாளராக நிற்கின்றேன் என்னை வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கனிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்

“தேர்தலின் சின்னம் தென்னை
தேர்ந்தெடுங்கள் என்னை “
என்று 17வது வார்டு மக்களிடம் அன்போடு கேட்டுக் கொள்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *