
கீழக்கரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் முஹம்மது ஃபரூஸ் தலைமையில் நடந்தது.யாசர் அரபாத் விளக்கம் அளித்தார்.
கீழக்கரை தவ்ஹீ்த் பேரவை சார்பாக, நடுத்தெரு கிளையில், NTF மாநில செயலாளர் யாசர் அராபத் இம்தாதி பதிலளித்த “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி மிக விமர்சயாக நடைபெற்றது.
NTF மாநில சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் முஹம்மதுஃபரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கீழக்கரை தவ்ஹீ்த் பேரவை செயலாளர் செய்யது காசிம் மற்றும் துணை செயலாளர் ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். NTF இராமநாதபுரம் மாவட்ட துணை செயலாளர் பரக்கத் அலி வரவேற்புரை ஆற்றினார்.
நிறைவாக NTF மாநில பிரதிநிதி முஹம்மது அஸ்பர் நன்றியுரை கூறினார்.
ஆண்களை விட பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு, இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியது, நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.
கீழக்கரை தவ்ஹீ்த் பேரவை தேசிய தவ்ஹீ்த் கூட்டமைப்பு NTF இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வெளியிடுவோர்
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
98424 23752
94434 65765 🔥🔥👇🏻👇🏻
