ராமநாதபுரம், பிப்.12:
கீழக்கரை 19வது வார்டில் நீண்டநாள் பிரச்சனையான கழிவுநீரை வெளியேற்ற வாறுகால் வசதி ஏற்படுத்தப்படும் என சுயேட்சை வேட்பாளர் முகம்மது கையூம் சாகிப் உறுதி அளித்துள்ளார்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கடந்த 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது கீழக்கரை நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 110 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
வார்டு 19ல் சுயேட்சை வேட்பாளராக முகம்மது கையூம் சாகிப் களம் இறங்குகிறார். வார்டில் பல இடங்களில் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்து தெருக்கள்தோறும் கழிவுநீர் வெளியேறியபடி உள்ளது.
அதை முறையாக வெளியேற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை
துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் வெற்றிபெற்றால் அப்பகுதியில் முறையாக வாறுகால் வசதி ஏற்படுத்தி கழிவு நீரை சாலையில் தேங்க விடாமல் அப்புறப்படுத்துவதாக சுயேட்சை வேட்பாளர் முகம்மது கையூம் சாகிப் உறுதியளித்தார்
19வது வார்டின் வெற்றி வேட்பாளராக வலம் வரும் அவரை பொதுமக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.
