
ராமநாதபுரம், பிப்.12:
கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 17வது வார்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் வேட்பாளர் நெய்னா முகமது போட்டியிடுகிறார்.
இதேபோல் 20 வது வார்டில் முகம்மது ஃபஹ்ருல் ஃபயாஸ் போட்டியிடுகிறார்

இதையடுத்து 17வது வார்டு, 20வது வார்டு, பகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறக்கப்பட்டது.
மாநில பொருளாளர் ஷாஜகான் தலைமை வகித்தார். நகர் தலைவர் சேகுஜமாலுதீன் முன்னிலை வகித்து தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். 17வது வார்டு வேட்பாளர் நெய்னா முகமது வரவேற்றார். மாநில ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட தலைவர் வரிசைமுகமது, மாவட்ட ஊடகத்துறை துணை ஒருங்கிணைப்பாளர் ஷாமிர்கான், நகர் செயலாளர் ஹபிப் முகமது தம்பி, லெப்பை தம்பி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வேட்பாளர்கள் நெய்னா முகமது, முகம்மது ஃபஹ்ருல் ஃபயாஸ்
கூறுகையில் , வார்டுகளில் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பொதுமக்களுக்கு
பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். வார்டு பகுதிகளில் குப்பைகள் எங்கும் எங்கும் தேங்காத வகையில் குப்பை தொட்டி அமைத்து அவற்றை முறையாக அல்ல நடவடிக்கை எடுக்கப்படும் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் வீடுகளுக்கு காவிரி குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
என்று கூறினார்.
