ராமநாதபுரம், பிப்.12:
கீழக்கரை 10வது வார்டில் பொதுமக்களுக்கு தேவையான
அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் நிலோஃபர் நிஷா பேகம் உறுதி
அளித்தார்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கடந்த 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது கீழக்கரை நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 110 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
வார்டு 10ல் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் விசிக வேட்பாளராக
தென்னை மரம் சின்னத்தில் அ.நிலோஃபர் நிஷா பேகம் களம் இறங்குகிறார்.
10வது வார்டில் அரசின் திட்டங்களான திருமண உதவி தொகை, முதியோர் உதவி தொகை, கர்ப்பிணி பெண்களுக்கான உதவி தொகை உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
10வது வார்டில் கழிவு நீர் நிறைந்து அடிக்கடி சாலைகளில் வெளியேறி வருகிறது. அதை நிரந்தரமாக தடுக்க முறையான வாறுகால் வசதி ஏற்படுத்தி கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். வார்டில் சேரும் குப்பைகள் அனைத்தையும் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அனைத்து தெருக்களிலும் குடிநீர் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தான் வெற்றிபெற்றால் பொதுமக்களுக்கு தேவையான
அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் நிலோஃபர் நிஷா பேகம் உறுதி
அளித்தார்
10வது வார்டின் வெற்றி வேட்பாளராக வலம் வரும் அவரை பொதுமக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.
