
கீழக்கரை,பிப்.11:-
கீழக்கரையில் 24 மணி நேரமும் வார்டில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களின் அத்தியாவசிய தேவைக்காக என்னை தொடர்பு கொள்ளலாம் என திமுக வேட்பாளர் அஸ்கர் (எ) செய்யது முகமது வாக்குறுதி அளித்தார்.இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கடந்த 2004-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது கீழக்கரை நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 110 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
வார்டு 21-ல் திமுக வேட்பாளராக அஸ்கர் (எ)செய்யது முகமது களம் இறங்குகிறார்.உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் அவரது வார்டில் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார். வார்டில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து உடல்நிலை சரியில்லாத அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சேவை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

21-வது வார்டில் கழிவு நீர் நிறைந்து அடிக்கடி சாலைகளில் வெளியேறி வருகிறது. அதை நிரந்தரமாக தடுக்க முறையான வாறுகால் வசதி ஏற்படுத்தி கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.வார்டில் சேரும் குப்பைகள் அனைத்தையும் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அனைத்து தெருக்களிலும் குடிநீர் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று தெரிவித்தார்.இதுவரை பதவியில் இல்லாத அவரை பொதுமக்கள் தேர்வு செய்தால் எவ்வித தயக்கமுமின்றி அவரை 24-மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பட்டா மாறுதல் முகாம் அமைத்து விடுபட்ட அனைவருக்கும் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

21-வது வார்டில் மீனவர்கள் அதிகம் வசிப்பதால் மீன்துறை அலுவலகம் தொடர்பான காரியங்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார்.தெருக்கள் தோறும் தெரு விளக்குகள் அமைத்து அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

21-வது வார்டின் வெற்றி வேட்பாளராக வலம் வரும் அவரை பொதுமக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.

