இராமநாதபுரம்,பிப்.10:-
இராமநாதபுரம் நகர் மன்ற எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் பி.அப்துல் ஹமீது இன்று (10.02.2022) சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்திற்கு முன்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
நீண்ட நெடுங்காலமாக இராமநாதபுரம் நகராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்பு மேம்படுவதற்காக எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்கள் பாடுபடுவார்கள்,குரல் எழுப்புவார்கள்.ஏற்கனவே மக்களுக்காக 12 ஆண்டுகள் மக்கள் பணி செய்து கொண்டிருக்கக் கூடிய எஸ்டிபிஐ கட்சியினுடைய வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் பெருவாரியான ஆதரவு இருப்பதினால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று கூறி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்கள்.இப்பிரச்சாரத்தின் போது எஸ்டிபிஐ இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான்,மாவட்ட ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
