பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ10 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

விருதுநகர் மாவட்டம் அம்மன் கோவில்பட்டி பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலையில் நேற்று இரவு பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, வழக்கம் போல் மீதம் உள்ள கழிவுகளை ஆலையின் பின் பகுதியில் உள்ள குழியில் போட்டு எரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வினால், பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்து உள்ளார்கள் என்கின்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .

உயிரிழந்துள்ள இருவர் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம். மேலும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நபருக்கு கூடுதலாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பணி செய்யும் தொழிலாளர்கள் ஓவ்வொருவர் மீதும் ரூ 10 லட்சத்திற்கு இன்ஸ்சூரன்ஸ் வழங்க என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .

பட்டாசு ஆலைகள் முறையாக பராமரிக்க பட்டு பாதுகாப்பாக இயக்க படுகிறாதா என்று அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தொழிளார்களின் உயிருக்கு எந்த வித பாதுகாப்பு இல்லாத பட்டாசு ஆலைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

எனவே : பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் தொடந்த வன்னமாக உள்ளன .இனிவரும் காலங்களில் இது போன்று கொர சம்பங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் மாண்பு மிகு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தகுந்த நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *