இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு க .ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை யொட்டி ஆயுள் தண்டனை சிறைவாசிகள் ஏழு நூறு பேர் முன் விடுதலை செய்ய படும் என தமிழக முதல்வர் மு க .ஸ்டாலின் அவர்கள் சட்ட மன்றத்தில் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு இஸ்லாமிய சிறைவாசிகளின் குடும்பத்தினருக்கு நம்பிக்கை வந்தது .

ஆனால் ஏழு நூறு ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை சம்பந்தமாக அரசு வெளியிட்டுள்ள அரசானை இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை கேள்வி குறியாக உள்ளது.மேலும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள் தி மு க அரசு மீது வைத்த நம்பிக்கை இழக்கும் வகையில் இந்த அரசானை உள்ளது. ஆகவே மாண்புமிகு முதல்வர் மு க .ஸ்டாலின் அவர்கள் மாற்று புதிய அரசானை உடனடியாக வெளியிட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை ஆவதற்கு அனைத்து தகுதியும் இருந்தும் விடுதலை செய்வதில்லை. மாறாக இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் நோயினால் பாதிக்க பட்டு பலரும் உயிரிழந்து உள்ளனர். பத்தாண்டுக்கும் மேலாக தமிழக சிறைச்சாலைகளில் தன்டனை அனுவித்து வரும் இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் மு க .ஸ்டாலின் அவர்கள் செவி சாய்க்காமல் மவுனம் காப்பது ஏன் ?

எனவே : எந்த வித பாரம் பட்சம் பார்க்காமல் பொது மன்னிப்பு வழங்கி அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ன் விதியின் படி இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின் அவர்களை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *