இராமநாதபுரம்,நவ.27:-

இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட பெரியபட்டினம் ஊராட்சியில் சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்ட நிகழ்ச்சி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்
கே.நவாஸ்கனி தலைமையில் நடைபெற்றது.
உதவி திட்ட இயக்குனர் குமரேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூடுதல் ஆட்சியரும்,திட்ட இயக்குனருமான கே.ஜே.பிரவீன் குமார்,ஒன்றிய குழு தலைவர் ச.புல்லாணி,ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பெரியபட்டினம் பைரோஸ்கான் (எஸ்.டி.பி.ஐ), சுமதி ஜெயக்குமார் (அ.தி.மு.க),பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான்பீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியிலிருந்து தத்தெடுப்பு ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது பெரியபட்டிணம் ஊராட்சியாகும்.இந்த ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் சென்று சேர முயற்சி எடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் முன்மாதிரி கிராமத் திட்டம் மக்கள் தொடர்பு சிறப்பு முகாமாக பெரியபட்டிணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 27.11.2021 இன்று நடைபெற்றது.தனிமனித அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றிற்கான வேண்டுகோளாக 45 மனுக்களை அளித்து கவனத்தை எடுத்துரைத்தனர்.
கொடுக்கப்பட்ட மனுவிற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நவாஸ்கனி எம்.பி. உறுதியளித்தார்.ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தை பெரியபட்டினத்தில் உள்ள ஒரு சில நபர்கள் ஏற்க மறுத்ததால் அவர்களிடம் சரியான விளக்கத்தை கூறி எடுத்துரைத்தார்.

அதன்பின்பு மாவட்ட கூடுதல் ஆட்சியரும் திட்ட இயக்குநருமான பிரவீன்குமார் பேசியதாவது:-

கடந்த காலங்களில் பெரியபட்டினம் அருகில் உள்ள குத்துக்கல்வலசை கிராமத்தில் தார்சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளங்கள் தூர்வாரும் பணிகள் நிறைவேற்றியதை எடுத்துரைத்தார்.மேலும்
பெரியபட்டினத்தில் பிரச்சனையாக இருக்கும் ஜல்ஜீவன் திட்டத்தை நீங்கள் தற்போது ஏற்க மறுத்தால் அடிப்படைத் தேவைகள் நாளடைவில் பிற கிராமத்திற்கு சென்று அடையும் என்றும்,நீங்கள் தேவையான போது கேட்கும் பட்சத்தில் அவற்றை அரசே தர மறுக்கும் என எடுத்துரைத்து எச்சரித்தார்.இந்நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா,ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் புரோஸ்கான்,எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தலைவர் (கிழக்கு) பெரியபட்டினம் ரியாஸ்கான் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.ஆணையாளர் ராஜேந்திரன் நன்றியுரை கூறினார்.இறுதியாக தேசியகீதம் இசைத்து நிகழ்ச்சி நிறைவு பெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சேகு ஜலாலுதீன் சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *