இளைஞர்களை சீரழிக்கும் Free Fire கேமை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்தும் வகையில் மத்திய அரசு அறிவுறுத்தலில் படி தமிழகத்தில் முன்னால் ஆட்சி செய்த அ தி மு க அரசு முழு ஊரடங்கு அதன் பின் ஓரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது இதனை தொடர்ந்து ஆளும் தி மு க அரசும் ஊரடங்கு உத்தரவை நடை முறை படுத்தி வருவது வரவேற்க்கதக்கது .

கோரோனாவின் காரணமாக கடந்த ஓன்றை ஆண்டு காலமாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கூடங்கள் மூட பட்டன . மேலும் மாணவர்கள் பள்ளி கூடம் சென்று பாடங்கள் படிக்க முடியாத சூழ்நிலையில் மாணவர்கள் பள்ளி பாடங்களை ஆன்லைன் மூலமாக படித்து வருகிறார்கள் .

ஆன்லைனில் பள்ளி பாடங்கள் படித்து வரும் மாணவர்கள் படிப்பு நேரங்கள் போக மற்ற நேரங்களில் Free Fire கேம் விளாயாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் . மேலும் Free Fire கேம் விளையாட்டினால் மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் படிக்க ஆர்வம் குறைதல், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நீண்ட இடை வெளி அதிகரித்தல், பொறுமையும் சகிப்புதன்மையும் குறைகிறது, மனசிதைவு போன்ற வகைகள் ஏற்படுகின்றன.

எனவே : இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு Free Fire கேமை தமிழகத்தில் தடை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்ததை கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் வவலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல்அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *