இராமநாதபுரம்,ஜீன்.08:-
கொரோனா பாதிப்பில் உள்ளானவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு உதவி மையம் திறக்கப்பட்டது.காவல்துறை ஆய்வாளா் சரவண பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவைகளை பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் தலைமை ஏற்றார் மேலும் மாவட்ட துணை செயலாளர்கள் தஸ்தக்கீர்,ஜியாவுல் ஹக்,சுல்த்தான் மற்றும் பேரிடர் உதவி மைய பொருப்பாளர் யாசர் அரபாத் முன்னிலை வகித்தனர்.
கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது,நோய்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,நோய் தொற்று கண்டறியும் முகாம் ஏற்பாடு செய்தல், தடுப்பூசி முகாம், ஆக்சிஜன்,ஆம்புலன்ஸ் வசதி, தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்குதல்,நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதல் வழங்குதல் நோய் எதிர்ப்பு சக்திக்கான கபசுர குடிநீர் வழங்குதல்,கொரோனா நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்தல், மருந்து உபகரணங்கள் கிடைக்க வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

HELPLINE:9342387346
முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐம்பது மையங்கள் திறக்கப்படுவதாக தெரிவித்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு மாவட்ட செயலாளரும்,பத்திரிகை தொடர்பாளருமான ஆரிஃப்கான் சிறப்பாக செய்திருந்தார்.