இராமநாதபுரம்,மே.26:-

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று (26.05.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில்,இராமநாதபுரம் ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் சார்பாக கொரோனா சிகிச்சை பெறும் நபர்களுக்கு பயன்படும் வகையில் ரூ.25.30 இலட்சம் மதிப்பில் 36 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டன.இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் போதிய அளவு இருப்பு வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,நிதி நிறுவனங்கள், தன்னார்வளர்களின் பங்களிப்பும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,இராமநாதபுரம் ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் சார்பாக கொரோகா சிகிச்சை பெறும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.25.30 இலட்சம் மதிப்பில் 36 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.இந்த நவீன கருவியானது வீட்டு உபயோக மின்சாரத்திலேயே இயங்கக்கூடியது.சுற்றுப்புற காற்றில் உள்ள ஆக்சிஜனை செறிவூட்டி மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் வகையில் மாற்றும் திறன் கொண்டது.கொரோனா சிகிச்சையில் அவசர ஆக்சிஜன் தேவை மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் ஆரம்ப கட்ட சூழ்நிலைகளில் இக்கருவி பெரிதும் உதவியாக இருக்கும். தன்னார்வத்துடன் முன்வந்து நன்கொடை வழங்கிய ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டியதோடு,இக்கருவிகளை பொதுமக்களுக்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் உபயோகித்திட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த நிகழ்வின்போது,இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூடுதல் கண்காணிப்பாளர் மலையரசு, நிலைய மருத்துவ அலுவலர் ஞானக்குமார்,ஆனந்தம் சில்க்ஸ் நிறுவன இயக்குனர்கள் சண்முகநாதன், கணேஷ்பாபு,ஆனந்தம் சில்க்ஸ் பொதுமேலாளர் ஞானமணி,வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *