இராமநாதபுரம்,மே.26:-

இராமநாதபுரம் மாவட்டம் , பட்டணம்காத்தான் ஊராட்சி, சேதுபதி நகர் பகுதியில் இன்று (26.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைப்பில் நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் வினியோகம் செய்யும் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு நடமாடும் வாகனங்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்கறி மற்றும் பழங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக 513 வாகனங்கள் மூலம் சுமார் 90 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.மாவட்ட அளவில் இப்பணிகளை ஒருங்கிணைக்க ஊராட்சி ஒன்றியம் வாரியாக தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள் பொதுமக்களின் தேவைக்கேற்ப ரூ.50/- மற்றும் ரூ.100/- என இரண்டு வகை தொகுப்புகளாக விற்பனை செய்யப்படுகின்றன.காய்கறி விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ இராமநாதபுரம் தோட்டக்கலை துணை இயக்குநர் (9443608932) அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை (மண்டபம் மற்றும் இராமநாதபுரம்) 7299462970,போகலூர் மற்றும் நயினார்கோவில் 8667602994, ஆர்.எஸ்.மங்கலம் 9659584931, திருவாடானை 9751381492,கமுதி 9489166421,முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி 9488540830,கடலாடி 7598027841,திருப்புல்லாணி 8220288448 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.காய்கறிகள் விலை கூடுதல் விற்பனை தொடர்பான புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படுவதுடன் ஊராடங்கு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது,கூடுதல் ஆட்சியர்/மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரதீப்குமார் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் நாகராஜன்,வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு மனை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *