ராமநாதபுரம், பிப்.19:

கீழக்கரை நகராட்சி 9 வார்டில்
திமுக வேட்பாளர் நஸ்ருதீன் வெற்றி பெற வேண்டும் என அப்பகுதி வார்டு பொதுமக்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கடந்த 2004ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது கீழக்கரை நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 110 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

வார்டு 9ல் திமுக வேட்பாளராக நஸ்ருதீன் களம் இறங்குகிறார்.
பள்ளி பருவம் முதல் இன்று வரை
சமூக அக்கறையில் அவர் பணிகள் செய்து வரும் நிலையில் அவர்தான் வெற்றி பெற்று வாழ்விற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்

அவரது வெற்றி குறித்து 9வது வார்டில் கள ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதி பொதுமக்கள் பலர் தங்களது கருத்துக்களை ஆதங்கத்தையும் பதிவு செய்தனர்

வார்டு 9ல் வசிக்கும் குடும்ப தலைவி நசீமா பேகம் கூறுகையில்.
வார்டில் கழிவு நீரை நிரந்தரமாக வெளியேற்ற முறையான வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து தெருக்களிலும் குடிநீர் குழாய் அமைத்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

முகமது அபூபக்கர் கூறுகையில்,
ஜமாஅத் பொதுக்கூட்டங்களிலே தெருவின் நலனுக்காக பலமுறை குரல் கொடுத்துள்ளார். சமூக நல இயக்கங்களோடு இணைத்து கொண்டு பணியாற்றி உள்ளார்.
அவர் வெளிநாட்டில் பணியாற்றிய காலத்தில் பலர் வெளிநாடு செல்ல உதவி செய்திருக்கிறார். அவசர தேவைகளிலும் அபாய காலங்களிலும் நேரத்தினை பொருட்படுத்தாமல் நிகழ்விடங்கள் சென்று பணியாற்றி உள்ளார்.
பலருக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். அவர்தான் வார்டில் வெற்றி பெற்று இனிவரும் காலங்களில் வாழ்விற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கூறினார்

குடும்பத் தலைவி ஜீனத் கூறுகையில், வார்டில் முதியவர்கள் பலர் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர் வெற்றி பெற்றவுடன், வரும் காலங்களில் வார்டில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து உடல்நிலை சரியில்லாத அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சேவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்

குடும்பத் தலைவர் சித்திக் கூறுகையில், வார்டில் சேரும் குப்பைகள் அனைத்தையும் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும். தெருக்கள்தோறும் தெரு விளக்குகள் அமைத்து அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

9 வது வார்டின் வெற்றி வேட்பாளராக வலம் வரும் அவரை பொதுமக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அவர் கேட்டுக்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *