இராமநாதபுரம்,ஜன.21:-

இராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சாயல்குடியை சேர்ந்த நசீர் என்பவர் சொந்த இடத்தில் தனது கட்சி கொடிக்கம்பத்தை நிறுவி உள்ளார்.அவற்றை எந்தவித முன்னறிவிப்புமின்றி திருட்டுத்தனமாக அதிகாலையில் அகற்றிய சாயல்குடி காவல்துறை சார்பு ஆய்வாளர் சரவணன்,காவலர்கள் செந்தூர்பாண்டி மற்றும் வேல்முருகன்,கடலாடி வட்டாட்சியர் சேகர்,கிராம நிர்வாக அலுவலர் செல்வம்,தலையாரி கோபால் ஆகியோரை திருட்டு வழக்கில் கைது செய்யக்கோரியும்,பிடுங்கப்பட்ட அதே இடத்தில் கொடிக்கம்பத்தை நட்டு வைத்து ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து
இராமநாதபுரம் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் பரக்கத்துல்லா தலைமையில் சாயல்குடி சந்தைத் திடலில் நடைபெற்றது.எஸ்.டி.பி.ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் க.முகம்மது யாசீன்,பெரியார் பேரவை தலைவர் க.நாகேசுவரன்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் எம்.எஸ்.எஸ்.முஹம்மது இப்ராஹிம்,வீரகுல தமிழர்படை மாநில ஒருங்கிணைப்பாளர் ந.கீழை பிரபாகரன்,ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பாஸ்கரன்,தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் ம.கோவிந்தன்,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கலையரசன் உள்ளிட்ட தோழமை கட்சியினர் கண்டன உரை நிகழ்த்தினர்.எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் B.அப்துல்ஹமீது கண்டன உரை நிகழ்த்தினார்.இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள்,பெண்கள், குழந்தைகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed