கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் கற்றல் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தமிழக அரசு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்வதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது . இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஒன்றியங்களில் கரகம், ஒயிலாட்டம்,பறை இசை மற்றும் நாடகங்கள் ஆகியவை நாடக கலைக்குழு கலைஞர்கள் மூலம் 1 குழுவிற்கு 9 நபர்கள்வீதம் 108 கலைஞர்கள் 12 குழுக்களாக பிரித்து 840 அரசுப் பள்ளிகள்,840 குடியிருப்பு இடங்கள் என மொத்தம் 1680 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரக் கலைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இக்கலைப் பயணத்தில் அந்தந்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கல்வித் தன்னார்வலர்களை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.இந்த விழிப்புணர்வு பிரச்சாரக் கலைப் பயணத்தை இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் 27.11.21 அன்று மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து இல்லம் தேடிக் கல்வி குறித்து உரையாற்றினார்.இராமநாதபுரம் நகரச் செயலாளர்கள் ஆர்.கே.கார்மேகம் (வடக்கு ),டி.ஆர்.பிரவீன்தங்கம் (தெற்கு),மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு) மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன்,இராமநாதபுரம் ஒன்றிய சேர்மன் பிரபாகர்,உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக்,உட்பட முக்கியப்பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) கணேசபாண்டியன், இராமநாதபுரம் கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் தெட்சிணாமூர்த்தி,இராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் கோ.உஷாராணி மற்றும் எம்.ஜெயா,வட்டார வளமைய மேற்பார்வையாளர் கே.சுந்தரமூர்த்தி,ஆசிரியர் பயிற்றுநர்கள் ஷோபனா, ஈஸ்வரவேலு சுரேஷ்,மனோகரன் மற்றும் முருகவேலு வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளித் தலைமமையாசிரியர் எஸ்தர்வேணி தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள்,பள்ளித் துணை ஆய்வாளர்கள்,கல்வி மாவட்ட ஒருங்கினைப்பாளர்கள்,11 ஒன்றியங்களில் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் (தொடக்கநிலை) அ.ஆரோக்கியசாமி,உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (மேல்நிலை), ஜோ.ரவி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெ.தர்மராஜ்,நா.பாலமுருகன், ச.சரவணன்,சீ.முருகேஸ்வரி மற்றும் அ.சுமதி,இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வே.தினசேகர்,மாவட்ட தகவல்சாதன அலுவலர் மு.பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *