இந்தியாவில் NITI Aayog திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய வகையில் 101 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அறவித்துள்ளது.இந்த மாவட்டங்களில் தொழில், விவசாயம்,கல்வி,பொருளாதார மேம்பாடு,சுகாதாரம் குறித்த பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைய செய்வது முன்மாதிரி மாவட்டங்களாக உருவாக்குவது என திட்டமிடபட்டுள்ள.இந்த 101 மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் அடங்கும்.இதனை அடிப்படையாக கொண்டு என்.எஸ்.இ பவுண்டேஷன் மற்றும் கிராமாலயா தொண்டு நிறுவனம் இணைந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் மற்றும் இராமநாதபுரம் ஒன்றியத்தை தேர்ந்தெடுத்து நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்தி மாவட்டத்தில் முன்மாதிரி ஒன்றியமாக உருவாக்க திட்டமிட்டுள்ளது.

எனவே என்.எஸ்.இ பவுண்டேஷன் நிதியுதவியுடன் கிராமாலயா நிறுவனம் 7,445 தனிநபர் இல்ல கழிப்பறைகள் 115 பள்ளி கழிப்பறைகள் 30 அங்கன்வாடி கழிப்பறைகள், 0 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் மராமத்து செய்து கொடுத்தல்.மேலும் 60 நீடித்த நிலைத்த சுகாதார முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல்இதனை தொடர்ந்து என்.எஸ்.இ பவுண்டேஷன் நிதிஉதவியுடன் கிராமாலயா தொண்டு நிறுவனம் 53 ஊராட்சிகளிலும் குடிநீர் சுகாதார நலக்குழு தொடங்கி இக்குடிநீர் சுகாதார நலக்குழு மூலம் இதுவரை 6063 தனிநபர் கழிப்பறை,95 பள்ளி கழிப்பறை,20 மகளிர் சுகாதார வளாகம்,30 அங்கன்வாடி கழிப்பறைகள் மராமத்து செய்து கொடுக்கபட்டுள்ளன.மேலும் 46 நீடித்த நிலைத்த முன்மாதரி கிராமங்களையும் உருவாக்கியுள்ளன.

19 நவம்பர் 2021 அன்று உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு இராஜசூரிய மடை கிராமத்தில் பழுதடைந்த பயன்பாட்டில் இல்லா 130 கழிப்பறைகள் மராமத்து செய்து கொடுத்து இன்று நீடித்த நீலைத்த சுகாதார முன்மாதிரி கிராமமாக மாற்றி ஊராட்சி மன்ற தலைவர் பாலாதேவி விஜயகுமார் தலைமையில்,துணை தலைவர் சசிகலா,கிராம சமூக ஆர்வலர் கபில்,ஊராட்சி மன்ற செயலாளர் சங்கீதா,வார்டு உறுப்பினர் உத்திரவேல் கிராம தலைவர் தங்கராசு மற்றும் இராஜசூரிய மடை குடிநீர் சுகாதார நலக்குழு இணைந்து ஊராட்சிமன்ற நீடித்த நிலைத்த திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற முன்மாதிரி கிராமமாக மாற்றப்பட்டுள்ளன இக்கூட்டத்தினை கிராமாலயா திட்ட ஒருங்கிணைப்பாளர் பாப்பு வழிநடத்திட கிராமாலாயா பணியாளர்கள் குருஈஸ்வர், சிவனேசன்,அந்தோணி ஜெயபால், ராஜ்குமார்,வேல்முருகன் மற்றும் கிராமாலயா சுகாதார பணியாளர்கள் மேகலா,பானுமதி,மதுபாலா பவித்ரா,மகாலட்சுமி கிராமத்தின் மகாத்மா காந்தி ஊரக வேலை பணியாளர்கள்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *