இராமநாதபுரம், ஆக.22:-

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே அரியாங்குண்டு கிராமத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு வார காலமாக நடந்தது.  போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இன்று பரிசளிப்பு விழா நடந்தது.காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ம.தெய்வேந்திரன்
முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.சேவாதள பிரிவு மாநில செயலாளர் எம்.அப்துல் அஜீஸ்,மாவட்ட பொதுச்செயலாளர் எம்.ராஜாமணி, மனோஜ் மெட்டல்ஸ் உலகண்ணன், ஜாக்கி அன்ட் ஜெயம் கம்பெனி நாகேஸ்வரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தலைவர் டாக்டர்.செல்லத்துரை அப்துல்லா வாழ்த்துரை வழங்கினார்.தங்கச்சிமடம் பிஜெ.ஸ்டான்லி வரவேற்றார்.சென்னை ஏஎம்இடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் நா.சே.ராமச்சந்திரன் விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொது செயலாளர் என்.ராஜீவ்காந்தி செய்திருந்தார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் என்.முத்துவேல் நன்றி கூறினார்.பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 78-வது பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *