தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்ற வந்த தலைவர் கலைஞரின் புதல்வன் இந்தியாவில் முதல்வரின் முதல்வர் தமிழக மக்களை கண்ணை இமை காப்பது போல், கடமை உணர்வோடு, கண்ணியம் குறையாமல் காக்கும் மக்கள் முதல்வரின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்களின் எண்ணத்திற்கும், மனதில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு மருந்தி ட்டதுபோல் மகிழ்ச்சியை தரக்கூடிய பட்ஜெட்டாக இப் பட்ஜெட் தாக்கல் அமைந்திருக்கிறது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஆராய்ந்து, பல்வேறு கோணங்களில் சிந்தித்து ,மக்களுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கக்கூடிய வகையில் தலைசிறந்த பட்ஜெட்டாக அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தந்திருக்கிறது. பலரும் பாராட்டும் வண்ண அமைந்திருக்கக் கூடிய பட்ஜெட்டை நாமும் பாராட்டுவதில், மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறோம் என்பதில், எண்ணற்ற நம்பிக்கையோடு, புதிய புதிய எண்ணங்கள் ததும்ப மக்களோடு மக்களாக வாழக்கூடிய முதல்வருக்கு துணை நிற்போம் என்கிற உணர்வோடு இருக்கிறோம். மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கக்கூடிய திட்டம் மட்டுமல்லாமல், மக்கள் எண்ணங்களை அறிந்து, புரிந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, பல வழிகளில் மக்கள் திட்டங்களை ஆராய்ந்து செயல்படுத்த முடிந்த திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்திருப்பது, பலரின் எண்ணங்களை சந்தோஷப்படுத்தியது மட்டுமல்லாமல், அனைவரின் புருவங்களையும் ஆச்சரியத்தோடு உயர்த்தி உள்ளதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. பல்வேறு திட்டங்களை எளிதில் மக்களை அடையக்கூடிய வகையில் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஏழை நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய வகையில் ,அன்றாடம் சொல்லி மாளாத வகையில் ,ஒன்றிய அரசின் பெட்ரோல் விலை உயர்வினால் அல்லல்படுவோரின் எண்ணங்களில் ஒளிமயமான வெளிச்சத்தை ஏற்றும் வகையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைப்பின் மூலம், நாட்டில் மக்களுக்கான ஆட்சி நல்லாட்சி தொடருகிறது என்பதில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தமிழ்நாட்டு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வரின் 100 நாட்கள் ஆட்சியை நூற்றாண்டு ஆட்சியின் சாதனையாக பார்க்கிறோம். நூற்றாண்டின் சாதனையை 100 நாட்களில் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்த சிறந்த முதல் முதல்வர் என்கிற பெருமையை பெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் சார்பில் இதயங்கனிந்த வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

M.A.N.சலீமுதீன்
பொதுச்செயலாளர்
தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *