மாணவர்களின் வளர்ச்சியே! தேசத்தின் எழுச்சி!மொபைலில் இருந்து வெளியே வா!களத்தில் விளையாடு!என்ற பிரச்சாரத்தின் ஒருபகுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பெரியபட்டினத்தில் நடைபெற்ற 5’s கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் இன்று வழங்கப்பட்டது.முதலாவது பரிசு KPS-A அணியினருக்கும் இரண்டாம் பரிசு KPS-B அணியினருக்கும் மூன்றாம் பரிசு 11 soccer அணியினருக்கும் வழங்கப்பட்டது.முதல் பரிசு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான்,மாவட்ட பொருளாளர் அகமது சிர்ஹான் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் முஹம்மது ஆதில் ஆகியோர் இணைந்து வழங்கினர்.இரண்டாம் பரிசினை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்த பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பையா வழங்கினார்.மூன்றாம் பரிசு முன்னாள் PET ஆசிரியர் சுரேஷ் வழங்கினார்.மற்றும் மேன் ஆப் தி மேட்ச் அயாஸ் என்பவருக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாணவர் அப்துல்லாஹ் பரிசினை வழங்கினார்.மேன் ஆப் தி சீரிஸ் நபில் என்பவருக்கு ஆசிரியர் சுரேஷ் பரிசினை வழங்கினார். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்.நிகழ்வின் நிறைவாக மாவட்ட பொருளாளர் அகமது சிர்ஹான் நன்றியுரை நிகழ்த்த இனிதே நிறைவுற்றது பரிசளிப்பு நிகழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed